சைபர் தகுக்குதல் மூலம் கொள்ளையடிக்கும் வடகொரியா - ஐ.நா. குற்றச்சாட்டு
ஏவுகணை சோதனைக்கு சைபர் தாக்குதல் நடத்தி பணத்தை கொள்ளையடிப்பதாக, வடகொரியா மீது ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடகொரியா ஏழு ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.
சர்வதேச தடைகள் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளால் வடகொரியாவின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தாலும், ஏவுகணை சோதனையில் அந்நாடு கவனம் செலுத்துவது வியப்பளிக்கிறது. இந்நிலையில் கிரிப்டோகரன்சி பரிமாற்றம் உள்ளிட்ட பல நாடுகளின் நிதி நிறுவனங்களில் வடகொரியா சைபர் தாக்குதல் நடத்தி பல பில்லியன் டாலர்களை திருடி ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஐ.நா. கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
குழு ஒரு அறிக்கையில் கூறியது: "வட கொரிய ஹேக்கர்கள் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் மட்டும் மூன்று கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் இருந்து 50 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 373 கோடி) வரை திருடியுள்ளனர். வட அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் , ஐரோப்பாவும் ஆசியாவும் வட கொரியாவில் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.