வாராந்தம் லொத்தர் சீட்டு கொள்வனவு செய்த தம்பதி 34 மில்லியன் டொலர் வெற்றி
கனடாவில் வாராந்தம் லொத்தர் சீட்டு கொள்வனவு செய்து வந்த தம்பதியினர் 34 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றுள்ளனர்.
ஒன்டாரியோவின் கேஷ் பேயைச் சேர்ந்த தம்பதியர் ஜோ மற்றும் லீஸ் மெனார்ட் ஆகியோர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லொத்தர் சீட்டு கொள்வனவு செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இந்த தம்பதியினர் ஹோட்டலில் இரவு உணவு உட்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திருமணமாகி 36 வருடங்கள் கடந்துள்ள இந்த தம்பதியர், வாரம்தோறும் வெள்ளிக்கிழமை இரவு லொத்தர் சீட்டு கொள்வனவு செய்து வந்துள்ளனர்.
கடந்த ஜூன் 21ம் திகதி இந்த தம்பதியினர் கொள்வனவு செய்த லாட்டோ 6/49 கோல்ட் பால் லொத்தர் சீட்டு மூலம் 34 மில்லியன் டொலர் பணப்பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது.
லொத்தர் சீட்டு மூலம் கிடைக்கப் பெற்ற பணத்தைக்கொண்டு குடும்பத்தினருக்கு உதவ உள்ளதாகவும் தங்களது கனவு இல்லத்தை உருவாக்க உள்ளதாகவும் இந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.