கனடாவில் கோழி முட்டை மூலம் பிரபலமான பெண்!
கனடாவில் பெண் ஒருவர் தனது கோழி முட்டையின் மூலம் பிரபல்யமாகியுள்ளார்.
ஒன்றாரியோ மாகாணத்தின் மாட்டாவா பகுதியில் வசித்து வரும் மெலின்டா கிரியோனின் என்ற பெண் வளர்த்த கோழிகளில் ஒன்று பெரிய முட்டை ஒன்றை இட்டுள்ளது.
மெலின்டாவின் கோழிப் பண்ணையில் சுமார் 60 கோழிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றன.
வழமையான முட்டையின் அளவினை விடவும் மூன்று மடங்கு பெரிய முட்டையொன்று இடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரண முட்டை ஒன்றின் எடை 56 கிராம்கள் என்ற போதிலும் இந்த முட்டையின் எடை 152 கிராம்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய உணவுப் பரிசோதனை முகவர் நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இந்த முட்டையை தனது செல்லப் பிராணியான நாய்க்கு வழங்க உள்ளதாக தாக மெலின்டா தெரிவிக்கின்றார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாரியோவில் 175 கிராம் எடையுடைய முட்டையொன்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.