போதிய அதிகாரங்கள் இல்லை; பதவி விலகிய ஜனாதிபதி!
நாட்டின் நெருக்கடி காலத்தில் தமக்கு போதிய அதிகாரங்கள் இல்லை எனக் கூறி ஆர்மேனிய ஜனாதிபதி ஆர்மென் சர்கிசியன் (Armen Sarkissian) பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் ஜனாதிபதியாக இருக்கும் சர்கிசியன் (Armen Sarkissian) , கடந்த ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் பிரச்சினையின் மையமாக இருந்து வந்தார்.
இந்நிலையில் இராணுவத் தளபதியை பதவி நீக்கியது உட்பட பல விவகாரங்களில் பிரதமர் நிகோல் பசின்யானுடன் அவர் முரண்பட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில்,
“இது ஒரு உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு அல்ல. குறிப்பிட்ட தர்க்கத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு” என்று சர்கிசியன் (Armen Sarkissian) கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை  2015 டிசம்பரில் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பை அடுத்து ஆர்மேனியா நாடாளுமன்ற முறையிலான குடியரசாக மாறியதோடு ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட நிலையில்,  இதனால் பிரதமரின் அதிகாரம் அங்கு  அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        