ரஷ்யாவிடம் மண்டியிடப்போவதில்லை; உக்ரைன் ஜனாதிபதி
ரஷ்யாவின் இராணுவம், உக்ரேனிய தலைநகரை நெருங்கி, தெருக்கள் தோறும் குண்டுமழை பொழிந்து வருகிறது.
44 வயது உக்ரேனிய ஜனாதிபதி, ரஷ்யாவிடம் மண்டியிடப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.
இவரையும் இவரது குடும்பத்தையும் அழிக்க, விஷேட படை ஒன்றை ரஷ்யா களத்தில் இறக்கியுள்ளது.
தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இன்னமும் தன்னுடனேயே இருப்பதாக நேற்று இரவு உக்ரேனிய ஜனாதிபதி கூறினார்.
அவர் நினைத்திருந்தால் எப்போதோ தனது குடும்பத்தை வேறு பாதுகாப்பான நாட்டுக்கு அனுப்பியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அவர்களும் இவரைவிட்டுவிட்டுப் போக மறுத்துவிட்டார்கள்.
இந்நிலையில் அடுத்துவரும் ஒவ்வொரு மணித்துளியும் மிகவும் பரபரப்பானவை. எதுவும் நடக்கலாம் எனும் நிலை. ‘உலகம் எம்மைக் கைவிட்டுவிட்டது’ என்று கவலை தோய்ந்த முகத்தோடு, அதேவேளை இறுக்கமான குரலில் நேற்று இரவு உக்ரேனிய ஜனாதிபதி பேசியதைக் கேட்க கவலையாக இருந்தது.