உக்ரைனுக்கு உதவப் போவதில்லை; திட்டவட்டமாக அறிவித்த நாடு!
உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வரும் நிலையில் பலர் தங்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
ரஷியாவின் கொடூர செயலை கண்டித்து அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன.
இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரில் ஹங்கேரி விலகியே இருக்கும் என ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் (Viktor Orbán) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கிழக்கு எல்லையில் ஹங்கேரியை பிரச்சினைக்குள் இழுத்து விட உக்ரைன் முயற்சி செய்கிறது. ஹங்கேரி உக்ரைனுக்கு எவ்வித ஆயுத உதவிகளையும் வழங்கப் போவதில்லை.
அதோடு யாரோ ஒருவருக்கு பதில் நாம் பலியாகிவிட கூடாது என தெரிவித்த ஹங்கேரி பிரதமர் (Viktor Orbán), இந்த போரில் இழப்பு மட்டுமே மிஞ்சும் என்பதால் தாங்கல் விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.