வவுனியா செயலகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
வவவுனியா செயலகமானது தடுப்பூசி செலுத்தியவர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வவுனியா செயலகத்திற்குள் வருவோர் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள் என முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறையானது இன்றைய தினத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சேவை பெறுவதற்கு வருகை தருவோர் தடுப்பூசி அட்டையையும், தேசிய அடையாள அட்டையையும் தம்மோடு வைத்திருப்பது அவசியமாகும். மேலும் செயலகத்திற்குள் வருவோர் குறைத்து ஒரு தடுப்பூசியினையாவது செலுத்தியிருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் வருகை தருவோருக்கு செயலகத்தின் நுழைவாயிலில் வைத்து சேவைகள் வழங்கப்படும். இவ்வாறு வவுனியா பிரதேச செயலகம் அறிவிப்பு விடுத்துள்ளது.