அமெரிக்காவில் நூதன கொள்ளை ; பீர் திருட்டு குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரே நாளில் சுமார் 18,000 கிலோ பீர் மர்மமான முறையில் திருடப்பட்டுள்ளது.
மாண்ட்லெயார் பகுதியில் உள்ள பீர் விற்பனை மையத்தில், துணை ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் போல நடித்த மர்ம நபர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி இரண்டு லோடு பீர் சரக்குகளை லாரிகளில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
மொத்தம் சுமார் 70,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள பீர் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து பீர் நிறுவனமான Pabst Blue Ribbon, திருடப்பட்ட சரக்குகளை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், திருடர்களை கிண்டலடிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளையும் வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் விளம்பர யுக்தி அல்ல என்றும், உண்மையான திருட்டு சம்பவமே என மாண்ட்லெயார் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரு திருட்டுச் சம்பவங்களும் ஒரே திட்டமிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.