கனடாவில் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி
கனடா முழுவதும் வீட்டு விற்பனை நவம்பர் மாதத்தில் கடந்த ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 10.7% குறைந்துள்ளது என கனடிய வீட்டு மனை ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2026-ஐ நோக்கி நகரும் நிலையில், வீட்டு சந்தை தற்போது காத்திருப்பு நிலையில் இருப்பதாகவும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
நவம்பரில் நாடு முழுவதும் 33,895 வீடுகள் விற்பனையாகியுள்ளன எனவும் பருவகால சரிசெய்த கணக்கீட்டில், அக்டோபருடன் ஒப்பிடுகையில் விற்பனை 0.6% குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நவம்பரில் விற்கப்பட்ட வீடுகளின் தேசிய சராசரி விலை 682,219 டொலர்களாக பதிவாகி, ஆண்டு அடிப்படையில் 2% சரிவைக் காட்டியுள்ளது.
2025 முடிவிற்கு முன் ஒப்பந்தங்களை முடிக்க சில விற்பனையாளர்கள் விலை தளர்வுகளை வழங்கி வருகின்றனர்” என கனடிய வீட்டுமனை ஒன்றியத்தின் மூத்த பொருளாதார நிபுணர் சோன் கெட்ச்கார்ட் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் எதிர்வரும் ஆண்டில் வீட்டு விற்பனை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.