ஏமனில் நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து ; வெளியான புதிய தகவல்
ஏமன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முஸ்லிம் மத குரு காந்தபுரம் அபூபக்கர் முசலியார் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நிமிஷா பிரியா, 36. இவர், மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு, ஏமனில் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவரது கணவன் மற்றும் மகள் கேரளாவில் வசித்து வருகின்றனர்.
தற்போது, கடைசி முயற்சியாக, நிமிஷா பிரியாவின் 13 வயது மகள் மிஷெல், தனது தாயின் விடுதலைக்காக அதிகாரிகளிடம் மன்றாடுவதற்காக தனது தந்தை உடன் ஏமனுக்கு சென்று இருந்தார்.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முஸ்லிம் மத குரு காந்தபுரம் அபூபக்கர் முசலியார் உடன் சென்று இருந்தார்.
இந்நிலையில், கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முஸ்லிம் மத குரு காந்தபுரம் அபூபக்கர் முசலியார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அபூபக்கர் முசலியார் கூறியதாவது,
முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சனாவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், முன்னர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார். ஏமன் அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.