பிரித்தானிய மன்னரான மூன்றாம் சார்லஸின் அதிகாரப்பூர்வ உருவப்படம் வெளியானது!
பிரித்தானிய மன்னராக மூன்றாம் சார்லஸின் அதிகாரப்பூர்வ முழு உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் ராணி இரண்டாம் எலிசபெத் (96) வயது முதிர்வால் காலமானார்.
இதனையடுத்து எலிசபெத் மகன் மூன்றாம் சார்லஸ் (74) மன்னராக லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் சர்ச்சில் ஏற்பாடுகள் பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் செய்திருந்தது.
இந்த பாரம்பரிய விழா வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நடந்தது.
இதற்காக தங்க சாரட் குதிரை வண்டியில் சார்லஸ் மற்றும் கமீலா ஆகியோர் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
இசை வாத்தியங்கள் முழுங்க, மரியாதையுடன் அழைத்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த விழாவில், பிரதமர் ரிஷி சுனக் பைபிள் வாசித்தார். பிறகு, மன்னராக பதவியேற்பதற்கான உறுதிமொழிகளை ஏற்று கையெழுத்து போட்டார்.
இந்த நிலையில் மன்னராக சார்லசின் முதல் அதிகாரபூர்வ உருவப்படத்தை அரண்மணை இன்று வெளியிட்டுள்ளது.