கனடிய பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் பள்ளிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குரிய தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்தியுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அவசரமாக வலியுறுத்தியுள்ளனர்.
குளிர்காலம் தொடங்கவுள்ள சூழலில், குழந்தைகள் வகுப்பறைகளுக்குள் ஒன்றாக அதிக நேரத்தைச் செலவிடுவார்கள்.
இதனால் காய்ச்சல், கோவிட்-19 மற்றும் ஆர்.எஸ்.வி போன்ற நோய்த்தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகத் தட்டம்மை நோய் மீண்டும் பரவுவது குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அரசின் தரவுகளின்படி, கடந்த ஆண்டில் 2 வயதுக் குழந்தைகளில் 85 சதவீதம் பேர் மட்டுமே தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் ரூபெல்லா தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
தட்டம்மை நோய் பரவாமல் தடுக்கவும், சமூக நோய் எதிர்ப்புச் சக்தியைப் பேணவும் குறைந்தபட்சம் 95 சதவீதக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் தற்போதைய 85 சதவீத விகிதம் இந்த இலக்கை விடக் குறைவாக இருப்பதால், நோய் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது.
பெற்றோர் பிள்ளைகளின் தடுப்பூசி குறித்து கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.