இலங்கை மற்றும் இந்தியர்களுடன் மூழ்கிய எண்ணெய் கப்பல்; தேடும் நடவடிக்கை தீவிரம் !
ஓமான் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடலில் மூழ்கிய கப்பலில் 16 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களில் 13 இந்தியவர்களும் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் மையத்தில் உள்ள ராஸ் மத்ரகாவின் தென்கிழக்கில் “கொமரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது” விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக கடல்சார் பாதுகாப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த கப்பல் ஏமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
கடற்படை கப்பலை அனுப்பியது இந்தியா
பிரெஸ்டிஜ் பல்கன் என்ற கப்பலே கவிழ்ந்துள்ளது நிலையில் காணாமல்போன 16 பேரை தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடரும் அதேவேளை இந்தியா தனது கடற்படை கப்பலான ஐஎன்எஸ் டெக்கினை ஈடுபடுத்தியுள்ளது.
இந்தியா தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் தனது பி81 கடல்சார் கண்காணிப்பு விமானத்தையும் ஈடுபடுத்தியுள்ளது.