சுனக்கின் புதிய அமைச்சரவையில் பழைய மற்றும் புதுமுகங்கள்!
பிரித்தானியாவின் புதிய பிரதமரான , ரிஷி சுனக் எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மரை இன்று சந்திக்கிறார். அத்துடன் சுனக் தனது அமைச்சரவையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
அதில் லிஸ் டிரஸின் அமைச்சரவையில் இருந்த சிலரை பதவி நீக்கம் செய்த நிலையில், ஏனையோர் தமது பதவிகளில் இருந்து விலகிக்கொண்டனர். புதிய பிரதமர் ஏற்கனவே ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஷ் முதல் அமைச்சர்களுடன் தொலைபேசியின் ஊடாக கலந்துரையாடியுள்ளார்.
அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் உக்ரைன் தலைவர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் தொலைபேசி அழைப்புகளையும் மேற்கொண்டார்.
இதேவேளை பிரித்தானிய நிதியமைச்சராக ஜெர்மி ஹன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். தமது பொறுப்பில் இருந்து விலகிய ஒரு வாரத்திற்குப் பின்னர் சுயெல்லா பிராவர்மேன் உள்துறை செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
அதேசமயம் கிராண்ட் ஷொப்ஸ் ஜேக்கப் வணிகச் செயலாளராக நியமிக்கப்பட்டதுடன், ஜேம்ஸ் கிளவர்லி தொடர்ந்தும் வெளியுறவு செயலாளராகவும் பதவியமர்த்தப்பட்டுள்ளார்.