கனடாவின் இரு முக்கிய விமான நிறுவனங்கள் எடுத்த முடிவு: ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி

flights pandemic surge omicron
By Arbin Jan 20, 2022 07:08 AM GMT
Report

கனடாவின் மிகப்பெரிய இரு விமான சேவை நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ள நிலையில், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் கனடாவின் இரு பெரிய விமான சேவை நிறுவனங்களான WestJet மற்றும் Air Canada ஆகியவை தங்களின் ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.

பிப்ரவரி மாதத்திற்கான விமான சேவைகளில் 20% அளவுக்கு விமானங்களை ரத்து செய்துள்ளதாக WestJet விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 15% அளவுக்கு விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்த மூன்று வாரத்தில் WestJet நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், ஊழியர்கள் தட்டுப்பாடு, கனடா அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவையே முதன்மை காரணமாக கூறப்படுகிறது.

இதேவேளை, மார்ச் மாதத்திற்கான விமான சேவைகளில் 15% ரத்து செய்வதாக அறிவித்துள்ள Air Canada, பிப்ரவரி மாதத்திற்கான சேவைகளில் 11% ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

இதனால் மொத்தமாக 6,805 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும், கரீபியன் தீவுகளில் 14 பகுதிகளுக்கான விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ள Air Canada, இது ஜனவரி 24 தொடங்கி ஏப்ரல் 30ம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு அடுத்து சில தினங்களில் தகவல் தெரிவிக்கப்படும் என WestJet நிறுவனம் அறிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான விமானங்கள் தொடர்ந்து ரத்தாகும் சூழல் மீண்டும் உருவாகியுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US