கடமை நேரத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மோசமான செயல்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், கடமை நேரத்தில் சீருடை அணிந்து ஆயுதத்துடன் முன்னாள் காதலரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் செயல்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்டாரியோ மாகாண காவல் துறையை (OPP) சேர்ந்த அமாண்டா ஃபெரல் (Amanda Farrell) (வயது 41) மீது, தாக்குதல், குற்றத் தொல்லை, சொத்து சேதம் மற்றும் அனுமதியின்றி வீட்டில் நுழைந்தது உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், குற்றச்சாட்டுகளைத் தீர்க்கும் வகையில் ஃபெரல், ‘Peace Bond’ ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அவரது குற்றவியல் குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

அது 15 நிமிடங்கள் நீடித்த பயங்கரம். அவர் முழு சீருடையில், பெரும்பாலும் கையால் ஆயுதத்தைத் தொட்டபடி, எங்களை விரட்டி வந்தார். என்னை நோக்கி சத்தமிட்டார் என பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.