பிரித்தானியாவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள்!
பிரித்தானியாவில் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில மாதங்களில் பேருந்து சாரதிகள், தபால் ஊழியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தங்களது வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதே கோரிக்கையை பிரித்தானியாவில் உள்ள பயிற்சி மருத்துவர்களும் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நாடு முழுவதும் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் பணியாற்றும் பயிற்சி ம்,ருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அவசர சிகிச்சை, பிரசவம் உள்ளிட்ட முக்கியமான சேவைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் இன்றைய தினம் (14-03-2023) போராட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.