ஒன்றாரியோவில் கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவர் கைது
கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் மோரிஸ்டோன் பகுதியில் வீடு உடைப்பு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வீட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 31 ஆம் தேதி இந்த கொள்ளை சம்பவம் இவ்விடம் பெற்றுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் வெலிங்டன் கவுன்ட்டி பகுதியில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூன்று பேர் வீட்டுக்குள் பலவந்தமாக பிரவேசித்து இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது வீட்டு உரிமையாளர்களை குறித்த கொள்ளையர்கள் தாக்கியதா தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது வீட்டில் இருந்த ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளது.