கனடாவில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி உயிரிழப்பு
கனடாவின் தெற்கு நியு பிரவுன்ஸ்விக் பகுதியில் சிறிய வர்த்தக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் விமானி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ரொபின்சன் ஆர்.44 (Robinson R-44) என்ற வகை ஹெலிகாப்டர் பிரிட்ரிக்சன் நகரிலிருந்து சாசெக்ஸ் விமான நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்தது. இந்த பயணம் சுமார் 80 கிலோமீட்டர் தூரம் கொண்டதாகும்.
சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பிரிட்ரிக்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே நபர் பயணித்த ஹெலிகாப்டர் காணாமல் போயுள்ளதாக தகவல் அளித்ததைத் தொடர்ந்து தேடுதல் பணிகள் தொடங்கப்பட்டன.
தேடுதல் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, ஹெலிகாப்டர் உடைந்த சிதைவுகளையும், உயிரிழந்த விமானியின் உடலையும், கடைசியாக சிக்னல் கிடைத்த பகுதியில் கண்டுபிடித்தனர்.
இந்த விபத்து சசெக்ஸ் விமான நிலையத்தின் மேற்குப்-வடமேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
இந்த ஹெலிகாப்டர் வர்த்தக பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் உயிரிழந்த விமானியின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.