மின்டோவில் வீட்டு தீ விபத்து – 75 வயதுடையவர் உயிரிழப்பு
கனடாவின் மின்டோ பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், மின்டோ – நார்மண்டி டவுன்லைன் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
தீ விபத்து ஏற்பட்ட வீட்டுக்குள் 75 வயதுடைய ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் உள்ளவர்கள் Ontario Provincial Police (OPP) அதிகாரிகளை 1-888-310-1122 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கிரைம் ஸ்டாப்பர்ஸ் மூலம் ஆன்லைன் வழியாகவோ அல்லது 1-800-222-8477 என்ற எண்ணிலும் தகவல் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.