லாரி - கார் மோதி ஒருவர் பரிதாப பலி, இருவர் காயம்!
கனடாவின் சவுத் புரூஸ் பகுதியின், பிராக்டன் நகருக்கு வடக்கே கார் மற்றும் வர்த்தக லாரி ஆகியவை மோதி ஏற்பட்ட ஒரு கொடூர விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
'சைடுரோடு 10 சவுத்' மற்றும் 'கண்சேஷன் 4 ஈஸ்ட் பிரான்ட்' சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த பயணிகள் காரும், பெரிய வர்த்தக லாரியும் இந்தச் சந்திப்பில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வாக்கர்டன் (Walkerton) பகுதியைச் சேர்ந்த 61 வயது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் லாரி மற்றும் காரின் ஓட்டுநர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான சரியான காரணம் குறித்துப் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.