பிரான்ஸ் பாடசாலை கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்
மேற்கு பிரான்சில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றில் நேற்று (24) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒரு மாணவர் உயிரிழந்ததுடன் மூன்று பேர் காயமடைதுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர் 15 வயது மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நான்டெஸுக்கு அருகிலுள்ள டூலோனில் உள்ள தனியார் நோட்ரே-டேம்-டி-டவுட்ஸ்-எய்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகளுக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த மூவரில் ஒரு சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பொலிஸார் வருவதற்கு முன்பே ஆசிரியர்கள் தாக்குதலை முறியடிக்க முடிந்தது.
ஆசிரியர்களின் துணிச்சலை பாராட்டிய பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அவர்களின் துணிச்சல் மரியாதைக்குரியது என்றார். அதேவேளை உயிரிழந்தவர்களின் துக்கத்தில் பிரான்ஸ் அவர்களின் பங்கு கொண்டது என்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.