கனடாவில் உணவு நிவாரணம் பெறுவோரின் எண்ணிக்கை உயர்வு
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு உணவு வங்கியில் கடந்த ஆண்டு சுமார் ஒரு மில்லியன் பெயர் உதவிகளை பெற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு பணவீக்கம் போன்ற காரணங்களினால் பலர் உணவு வங்கியின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.
அந்த அடிப்படையில் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு உணவு வங்கியில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் உதவி பெற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
பசி நிவாரண நிறுவனங்களின் வலையமைப்பு இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. Feed Ontario என்ற நிறுவனம் சுமார் 1200 உணவு வங்கிகளை நடத்தி வருகின்றது.
கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் குறித்த உணவு வங்கியின் உதவியை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இது கடந்த ஆண்டை விடவும் 25 வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் போதிய அளவு உணவு இன்றி வாழும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, வாடகை செல்வத்துவதற்கு முடியாத பலர் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களை பட்டினி பிணியில் இருந்து மீட்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வறுமையில் வாடும் மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உணவு வங்கிகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.