கனடாவில் பொது போக்குவரத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நகரம் இதுதான்
கனடாவில் ஒட்டாவா மக்கள் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை பயன்படுத்த மிக அதிக கட்டணங்களை செலுத்துவதில் நான்காவது இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
பிறக்கவிருக்கும் புத்தாண்டு முதல் மேலும் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2022ம் ஆண்டிற்கான வரைவு நிதிநிலை அறிக்கையானது ஜனவரி 1ம் திகதி முதல் போக்குவரத்து கட்டணங்களை 2.5 சதவீதம் மேலும் உயர்த்த பரிந்துரைக்கிறது.
இதனால் வயது வந்தோருக்கான மாதாந்திர பேருந்து கட்டணமானது 125.50 டொலர் என அதிகரிக்கும் எனவும், ஒருவழி கட்டணமாக வயது வந்தோருக்கு இனி 3.75 டொலராக இருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது.
பேருந்து மற்றும் இரயில் கட்டணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், ஒட்டாவா மக்களே கனடாவிலேயே நான்காவது அதிக கட்டணம் செலுத்தி வருகின்றனர் என தெரிய வந்துள்ளது.
ரொறன்ரோவின் TTC சேவை தான் கனடாவில் மிக அதிகமாக 156 டொலர் கட்டணம் வசூலிக்கிறது.
இரண்டாவது இடத்தில் 135 டொலருடன் Mississauga-ன் MiWay உள்ளது. மூன்றாவது இடத்தில் 128 டொலருடன் பிராம்டன் உள்ளது. கல்கரியில் வயது வந்தோருக்கான மாதாந்திர பேருந்து கட்டணமாக $109 வசூலிக்கப்படுகிறது.