ஒன்றாரியோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பரிதாப மரணம்
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மிடில்செக்ஸ் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
எகரிமொன்ட் ட்ரைவ் Egremont Drive சாலையில் இன்று காலை ஒரு பஸ் மற்றும் எஸ்.யூ.வீ வாகனம் என்பன மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக ஒன்ராறியோ போலீசார் (OPP) தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்றதால் குறித்த சாலை மூடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்களை எதிர்திசைகளில் செலுத்தியபோது மோதல் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஸ்.யூ.வீ SUV வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ட்ரக் சாரதி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.