கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஒருவர் பலி
கனடாவில், நியூபவுண்ட்லாந்தின் மேற்கு பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (Transportation Safety Board) விசாரணை குழுவினரை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது.
இந்த விமானம் டீர் லேக் Deer Lake விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமான நிலையத்திற்குத் தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது.
விமான விபத்தில் உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
விமான விபத்தின் பின்னர் விமான நிலையத்திற்கு அருகாமையில் காணப்படும் பாதைகள் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணித்துள்ளனர் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.