பிரம்டன் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து
பிரம்டன் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. கட்டடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரம்டனின் கென்னடி மற்றும் துலார்மோர் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாடிக் குடியிருப்பின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ விபத்தில் சிக்கிய நபர் ஒருவரை பீல் பிராந்திய பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் நான்கு பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
என்ன காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.