கனடா பிரம்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவருக்கு நேர்ந்த நிலை
கனடாவின் பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒலிம்பியா கிரசன்ட் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து கொண்ட பொலிஸார், அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதன்போது படுகாயம் அடைந்த நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதை போலீசார் அவதானித்துள்ளனர்.
குறித்த நபரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நபர் படுகாயம் அடைந்துள்ள போதிலும் உயிர் ஆபத்து கிடையாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        