கனடாவில் மின்சைக்கிள் விபத்து: 15 வயது சிறுவன் பலி
கனடாவின் சோல்ட் ஸ்டேட் மாரி Sault Ste. Marie நகரில், மின்சைக்கிள் மற்றும் பிக்கப் ட்ரக் மோதிய விபத்தில் 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மற்றொரு 15 வயது சிறுவன் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து ஞாயிறு அதிகாலை 1:00 மணியளவில், குலாயிஸ் அவன்யூ Goulais Avenue-வின் 800-வது பிளாக்கில் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
911 உதவி அழைப்புகள் வந்ததையடுத்து, போலீசாரும், அவசர மருத்துவ குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
“சம்பவ இடத்திற்கு சென்றதும், இரண்டு பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் உயிர் காக்கும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உடனே இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அதில் ஒருவரான 15 வயது சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்றொரு சிறுவனும் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக 18 வயது சாரதி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்து குறித்து மேலதிக தகவல்களும் செவ்வாய்க்கிழமை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.