இங்கிலாந்தின் இந்த தீவில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லையாம்! ஆச்சரிய தகவல்
சீனாவின் வூஹானிலிருந்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் இன்று வரை உலக மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர், மக்கள் மேலும் மேலும் ஏழைகளாகவும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நோய்க்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஒவ்வொரு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உலகின் இந்த தீவில் மட்டும் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லையாம்.
UK அருகில் உள்ள அந்த தீவின் பெயர் Saint Helena Island, 121.7 கிமீ² பரப்பளவு கொண்ட இதன் மக்கள்தொகை 5000.
nzherald.co.nz என்ற தளத்தில் வெளியான செய்தியின்படி, இந்த தீவில், ஒரு கொரோனா தொற்று பாதிப்பு கூட பதிவாகவில்லை.
இதிலும் முக்கியமான விஷயம், இதுவரையிலும் கொரோனா விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லையாம்.
மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற எதுவுமே இல்லாமல் இயல்பான வாழ்க்கையை மக்கள் வாழ்ந்து வருகிறார்களாம்.