கனடாவிலிருந்து பயங்கரவாத அமைப்பில் சேர முயன்ற நபர் கைது
கனடாவை விட்டு வெளியேறி ஒரு பயங்கரவாத அமைப்பில் சேர முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கனடியர் ஒருவரை, பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்ராறியோ மாமாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் பெயர் மற்றும் அவர் சேர்ந்ததாகக் கூறப்படும் அமைப்பின் பெயர் தொடர்பான தகவல்கள், வெளியீட்டு தடைக்கு உட்பட்டு இருப்பதால் போலீசார் இதற்கு மேலதிக தகவல்களை வழங்கவில்லை.
சந்தேக நபர் கடந்த 20ம் திகதி பிராம்ப்டன் நீதிமன்றத்தில் முதல் முறையாக முன்னிலையாகியிருந்தனர்.
அவர் தற்போதும் காவலில் உள்ளார் என்றும், எதிர்காலத்தில் நடைபெற உள்ள நீதிமன்ற விசாரணைக்கு அப்போது திகதி நிர்ணயிக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த விசாரணையில் உதவியமைக்கு, பீல் பிராந்திய போலீசாருக்கு, கனடா எல்லைப் பாதுகாப்பு ஆணையத்திற்கும், கனடா பொதுமுறையியல் சேவைக்கும் மற்றும் பசிபிக் பிராந்திய INSET குழுவிற்கும், ஒன்ராறியோ INSET குழு நன்றி தெரிவித்துள்ளது.