டிரம்பின் மிரட்டல்களுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மிரட்டல்களுக்கு எதிராக அணி திரள வேண்டுமென ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
கனடியர்களை "முன்பு இல்லாத அளவுக்கு ஒன்று சேர்ந்து போராட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொரண்டோவில் நடைபெற்ற "மொழிபெயர்ப்பு மதிப்பீடு மற்றும் உலக சந்தைகள் மாநாட்டில்" திங்கள் காலை பேசிய ஃபோர்ட், டிரம்ப் உருவாக்கிய சிக்கல்கள் ஒன்ராறியோ மற்றும் நாடு முழுவதும் தொழிலாளர்களையும் வணிகங்களையும் பாதித்து வருவதாகக் கூறினார்.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும் என போர்ட் தெரிவித்துள்ளார்.
கனடா ஒருபோதும் 51வது மாநிலமாக மாறாது. கனடா விற்பனைக்கான பொருளாக இருக்காது," என அவர் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.
கனடியர்கள் புதிய பிரதமரை தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில் போர்ட் கருத்து வெளியிட்டுள்ளார்.