கனடாவில் குடிபோதையில் வாகன விபத்தை மேற்கொண்ட பெண்ணுக்கு எதிராக வழக்கு
கனடாவில் குடிபோதையில் வாகன விபத்தை மேற்கொண்ட பெண் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அடிகோக்கனில் உள்ள அதிவேகநெடுஞ்சாலை 11-ல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் 29 வயதுடைய ஒரு பெண்ணுக்கு போதை மற்றும் மது பயன்பாட்டின் கீழ் வாகனம் ஓட்டியதற்காக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை (OPP) தெரிவித்துள்ளது.
காலை 4 மணியளவில் அதிவேகநெடுஞ்சாலை 11 மற்றும் பிளாண்டர்ஸ் வீதி அருகே ஒரு வாகன விபத்து குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க்பபட்டுள்ளது.
அந்த வாகனத்தை செலுத்தியவரே தானாகவே இந்த விபத்தைப் பற்றி அறிவித்திருந்தார்.
விபத்தில் ஈடுபட்ட பெண் ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பரிசோதனையின் விளைவாக, பெண் போதை மற்றும் மதுபோதையில் இருந்ததால் பாதுகாப்பாக வாகனம் ஓட்ட இயலாத நிலைதான் இருந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.
குறித்த பெண்ணின் ஓட்டுநர் உரிமம் 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வாகனம் ஏழு நாட்களுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.