ஒன்றாரியோவில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி பலி! தப்பியோடிய சாரதி
ஒன்றாரியோவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாதசாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் Lawrence Avenue விற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது, பாதசாரி ஒருவர் மீது வாகனம் மோதிய நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் பாதசாரி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, வாகன விபத்துடன் தொடர்புடைய சாரதி பொலிஸாரை உடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் எவரேனும் தகவல் அறிந்தால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.