கனடாவில் நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாகாணம்
கனடாவில் நீதிபதி ஒருவருக்கு எதிராக ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
விவசாய சட்டம் தொடர்பிலான நீதிபதியின் தீர்ப்பிற்கு எதிராக இவ்வாறு ஒன்றாரியோ மாகாணம் மேன்முறையீடு செய்துள்ளது.
விவசாய சட்டத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணானது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
நீதிபதி மார்கஸ் கொஹென வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக இவ்வாறு மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி தன்னுடைய தீர்ப்பு மூலம் சில தவறுகளை இழைத்துள்ளதாக ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஒன்றாரியோ மேன்முறையீட்டு நீதிமன்றில் இது தொடர்பிலான வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்து மீறல்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் சில சரத்துக்களை நீதிபதி நீக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.
விவசாயிகளையும், மிருகங்களையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்தின் ஊடாக பண்ணைகளில் இடம்பெறும் விடயங்களை வெளிக்கொணர முடியாது என இந்த சட்டத்தை எதிர்க்கும் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.