ஒன்றாரியோவில் பெற்றோல் விலை உயர்வு
ஒன்றாரியோ மாகாணத்தில் பெற்றோல் விலை உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் இரண்டு நாட்களில் எரிபொருட்களின் விலைகள் குறிப்பாக பெற்றோல் விலை உயரும் என தெரிவிக்கப்படுகின்றது.
13 சதங்களினால் விலை உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய தினம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ஆறு சதங்களினால் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாளைய தினம் மேலும் 7 சதங்கள் விலை உயர்யுடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளைய தினம் பெற்றோலின் விலை ஒரு லீற்றர் 173.9 சதங்களாக விற்பனை செய்யப்பட உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 175 சத்த்திற்கு மேல் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் நாளைய தினம் விலைகள் இவ்வாறு உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.