அமெரிக்காவிலிருந்து துப்பாக்கிகளை கடத்தியதாக கனடிய இளைஞர் கைது
அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் துப்பாக்கிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சாதனங்களை கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 24 வயதுடைய ஹாமில்டன் நகரைச் சேர்ந்த டேனியல் மெனசஸ் (Daniel Menezes) என்பவருக்கு 19 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இது ஒன்றாரியொ மாகாண பொலிஸார் Ontario Provincial Police (OPP) மற்றும் அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் (U.S. Department of Homeland Security) உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்ட Border Enforcement Security Task Force (BEST) குழுவால் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 16ம் திகதி புர்லிங்டன் Burlington நகரில் மெனசஸ் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் எத்தனை துப்பாக்கிகளை கடத்த முயற்சித்தார் என்பது பற்றி காவல்துறையால் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
அனுமதியின்றி துப்பாக்கி இறக்குமதி செய்தல் (2 முறை), தடைசெய்யப்பட்ட சாதனங்களை அனுமதியின்றி வைத்திருத்தல் (2 முறை), துப்பாக்கி அனுமதியின்றி வைத்திருப்பது அறிந்திருந்தும் வைத்திருத்தல் (2 முறை), மற்றும் மொத்தமாக 19 குற்றச்சாட்டுகள் குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.