அடகுக் கடனை செலுத்த முடியாது வீட்டை விற்கும் கனடியர்
வட்டி வீதம் குறைக்கப்பட்டாலும் வீட்டை விற்பனை செய்யவே திட்டமிட்டுள்ளதாக ஒன்றாரியோவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வங்கி வட்டி வீதம் 0.25 வீதத்தினால் குறைக்கப்பட்டது.
கனடிய மத்திய வங்கி இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.
எனினும், அடகுக் கடன் தொகையை செலுத்த முடியாத காரணத்தினால் தாம் வீட்டை விற்பனை செய்வதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
அடகுக் கடன் தொகை இரண்டாயிரம் டொலர்களாக உயர்வடைய முன்னர் தாம் வீட்டை விற்பனை செய்ய உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒன்றாரியோவின் கிட்ச்னரைச் சேர்ந்த 66 வயதான கெரி பெஸ்ட் என்பவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 17ம் திகதி தமது அடகுக் கடன் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டியிருப்பதாகவும், அதற்கு முன்னதாக மீண்டும் வட்டி வீதங்கள் குறைக்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடகுக் கடன் தொகையை செலுத்துவதில் எதிர்நோக்கும் சவால்கள் காரணமாக இவ்வாறு வீட்டை விற்பனை செய்யத் தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.