கனடாவில் இடம்பெறும் முதலீட்டு மோசடிகள்
கனடாவில் முதலீட்டு மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலீடு செய்யும் போது முழுமையான ஆய்வை மேற்கொள்ளவோ அல்லது நிதி ஆலோசகரின் வழிகாட்டுதலைப் பெறவோ வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏனெனில், தற்போது குற்றவாளிகள் நம்பகமான நிறுவனங்களின் லோகோக்களைப் பயன்படுத்தி போலி இணையதளங்கள் மற்றும் ஆன்லைன் கருத்துக்களங்களை உருவாக்கி, “பம்ப்-அண்ட்-டம்ப்” எனப்படும் முதலீட்டு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘பம்ப்-அண்ட்-டம்ப்’ மோசடியில், ஒரு பங்குக்கு மிகுந்த வரவேற்பு இருப்பது போல பொய்யான விளம்பரங்கள் மூலம் முதலீட்டாளர்களை ஈர்த்து, பங்கு விலை உயர்ந்ததும் மோசடிக்காரர்கள் தங்களது பங்குகளை விற்று லாபம் ஈட்டுவார்கள்.
இதனால், பின்னர் அந்த பங்குகளை கொள்வனவு செய்தவர்கள் மதிப்பற்ற முதலீடுகளுடன் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகிறது.
ரிச்மண்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த இஸ்ரயேல் கிளைட் என்பவர் இவ்வாறு சுமார் 260000 டொலர்களை இழந்துள்ளார்.