ஒன்டாரியோவில் தட்டம்மை நோய் வேகமாக பரவும் அபாயம்
ஒன்டாரியோ மாகாணத்தில் தட்டம்மமை நோய்த்தொற்று கடுமையாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி போடாதவர்களிடையே இது மிக வேகமாகப் பரவுவதாக பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2024ம் ஆண்டு ஒக்டோபர் 28, அன்று ஆரம்பமான இந்த தொற்று, தற்போது 372 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
பெப்ரவரி 27 அன்று 195 பேருக்கு மட்டுமே இருந்த தொற்று, வெறும் சில வாரங்களில் இரட்டிப்பு அளவுக்கு அதிகரித்துள்ளது.
"1998-ல் கனடாவில் தட்டம்மை அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபிறகு, இத்தகைய பரவலை காணவில்லை.
ஆனால் தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளும், இளஞ்சிறார்களும் இதை மேலும் பரப்பிவிடுகின்றனர் என ஒன்டாரியோ பொது சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர் கிறிஸ்டின் நாவரோ கூறியுள்ளார்.
புதிய தொற்றுகள், முதலில் நியூ ப்ரன்ஸ்விக் மாகாணத்தில் பரவத் தொடங்கி, மனிடோபாவிற்கும் பரவியுள்ளது.
நோய்த் தொற்று தாக்கத்திற்கு உள்ளான 31 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.