கனடாவில் மோசடியில் சிக்கி சுமார் 6000 டொலர்களை இழந்த பெண்
ஓன்டாரியோவில் மாகாணத்தில் வசிக்கும் ஒரு பெண், தன்னுடைய மகன் குறுஞ்செய்தி அனுப்பியதாக நம்பி மொத்தமாக 5710 டொலர்களை இழந்துவிட்டதாக தெரிவித்தார்.
டிரென்டன் நகரைச் சேர்ந்த சு (Sue) என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த பெண், தனக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
"எனக்கு திடீரென்று ஒரு மெசேஜ் வந்தது. ‘ஹாய் அம்மா, இந்த எண்ணில் அழைக்க முடியாது, இது டெக்ஸ்ட் மற்றும் டேட்டாவுக்கானது’ என்று எழுதியிருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அவசரமாக பணம் தேவைப்படுவதாக மகன் கோரிய அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மகன் கேட்டதனால் தாம் உடனடியாக பணத்தை அனுப்பி வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
"ஒரு தாய் என்ற முறையில், மகனுக்குப் பணம் அனுப்புவது சரியான செயலாகவே தோன்றியது. சிறிதும் யோசிக்கவில்லை," என்று கூறியுள்ளார்.
எனினும் பின்னர் விசாரணை செய்த போது மகன் இந்த குறுஞ்செய்திகளை அனுப்பவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறான மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.