கனடாவில் மருத்துவரின் உதவியின்றி பார்மசிகளிலேயே மருந்து விநியோகிக்கும் நடைமுறை அறிமுகம்
கனடாவில் பார்மசிகளில் மருந்து வகைகளை பரிந்துரை செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மருத்துவர்களின் அனுமதியின்றி மருந்தாளர்களினால் இவ்வாறு மருந்துகள் வழங்க அனுமதி வழங்கப்பட உள்ளது.
குறிப்பிட்ட ஒரு சில பொதுவான நோய் நிலைமைகளுக்கு இவ்வாறு மருந்து வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வர உள்ளது.
கனடாவின் ஒன்றாரியோ மாகாண மருந்தகங்களில் இவ்வாறு மருந்தாளர்கள் சில வகை நோய்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரை இன்றி தாமாகவே மருந்து வழங்க அனுமதி வழங்கப்படுகின்றது.
ஒன்றாரியோ மாகாண சுகாதார அமைச்சர் சில்வியா ஜோன்ஸ் இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காய்ச்சல், பூச்சிகடி, தொண்டை வலி, மாதவிடாய் தசை பிடிப்பு, அமிலத்தன்மை ஆபதன’ற 13 வகையான நோய்களுக்கு இவ்வாறு மருந்தாளர்களே சிகிச்சை அளிக்கப்பட முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.