ஒன்டாரியோ முதல்வர் இன்று தனது புதிய அமைச்சரவையை அறிவிக்க உள்ளார்
ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் இன்று தனது புதிய அமைச்சரவை உறுப்பினர்களை அறிவிக்க உள்ளார்.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பிறகு, அவர் தனது அமைச்சரவையை அமைக்க உள்ளார்.
ஒன்டாரியோ மியூசியத்தில் நடைபெறும் விழாவில், முதல்வரும் அவரது அமைச்சரவையும் பதவியேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
பொதுவாக அமைச்சரவை மாற்றம் பற்றிய விபரங்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வழக்கம் இருக்கின்றது. ஆனால், ஃபோர்ட் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து எந்தவொரு அடையாளங்களையும் வழங்கவில்லை.
ஃபோர்ட், பலரையும் மீண்டும் அதே பதவிகளில் வைத்துக்கொள்வாரா அல்லது பெரிய அளவிலான மாற்றங்களை செய்யவாரா என்பது குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
அமெரிக்காவின் வரி (tariff) அச்சுறுத்தல்களை நேரடியாக சந்திக்க தான் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2018 முதல் ஃபோர்ட் தனது அமைச்சரவை அளவை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.
ஆகஸ்ட் மாதம் கூட புதிய இணை அமைச்சர்களை சேர்த்ததன் மூலம் அமைச்சரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்திருந்தது.