ஒன்றாரியோ துப்பாக்கிச்சூடு; நீடிக்கும் மர்மம்
கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோ தலைநகர் Toronto-வில் திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து Toronto பொலிஸ் தரப்பு கூறுகையில், Lakeshore Boulevard Wes மற்றும் Thirtieth தெருவிற்கு அருகிலுள்ள Long Branch பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
சம்பவயிடத்திற்கு விரைந்த போது, அங்கு இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் இருந்தனர். உடனே 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம், 3 பேரில் ஒருவர் மருத்துவமனையில் இறந்துவிட்டார்.
இரண்டு பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிசார் தெரிவித்துள்ள அதேசமயம், சம்பவ இடத்தில் தோட்டா உறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனே பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.