ஒன்டாரியோவில் STEM கல்விக்காக 750 மில்லியன் டொலர் முதலீடு
ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) தொடர்பான பாடநெறிகளுக்கான நிதியை அதிகரிக்க, மாகாண அரசு தீர்மானித்துள்ளது.
இதன்படி, இந்த துறைகளில் 750 மில்லியன் டொலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அமைச்சர் நோலன் குவின் இதுகுறித்து அறிவித்துள்ளார்.
இந்த நிதியினால் ஆண்டுதோறும் 20,500 புதிய மாணவர்களுக்கு STEM துறையில் கல்வி பயல்வதற்கான வாய்ப்பு உருவாகும் என தெரிவித்தார்.
மாணவர்களில் முதலீடு செய்வது, எதிர்காலத்தில் நிலைத்த மற்றும் மாற்றங்களுக்கேற்ப தக்க வளமான பொருளாதாரத்தை உருவாக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வர்த்தக போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இது முக்கிய பங்கு வகிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
STEM பாடநெறிகளுக்கான இந்த புதிய நிதி, கல்வி நிறுவனங்கள் 2025 முதல் 2030 வரை செல்லும் செயல்பாட்டு நிதி ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு உறுதி செய்ததும், உடனடியாக வழங்கப்படும் என மாகாண அரசு அறிவித்துள்ளது.