கனடாவில் குறைந்தளவில் AC பயன்படுத்துவோருக்கு கொடுப்பனவு
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் காற்று சீராக்கி எனப்படும் AC ஐ குறைவாக பயன்படுத்துவோருக்கு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
சக்தி வளத்தை பாதுகாக்கும் நோக்கில் மாகாண அரசாங்கம் பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இந்த செயல் திட்டத்திற்காக மாகாண அரசாங்கம் சுமார் 342 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
கோடை பருவகாலத்தில் வெப்பநிலை கூடிய நாட்களில் காற்று சீராக்கியை குறைவாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
சக்தி வளத்தை காத்திரமான முறையில் பயன்படுத்துவது குறித்து முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு மாகாண சக்திவளத்துறை அமைச்சர் டொட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதன் கூடுதல் பயனர்கள் நன்மை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
சக்தி வளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் கார்பன் வெளியீட்டையும் குறைக்க முடியும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.