கனடாவில் இடம்பெறும் டாக்ஸி மோசடி குறித்து எச்சரிக்கை
கனடாவில் இடம்பெறும் டாக்ஸி மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அண்மையில் பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பெண் ஒருவர் டாக்ஸி கடடணமாக ஏழு டொலர்களை செலுத்திய போது 7500 டொலர் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
7,485 டாலர்கள் மோசடி
லண்டனிலிருந்து டொரன்டோ நோக்கி பயணித்த பெண் ஒருவரே இந்த பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளார். டெபிட் அட்டையின் மூலம் தாம், கட்டணத்தை செலுத்தியதாக குறித்த பெண் தெரிவிக்கின்றார்.
லியனி பியச்சுமீன் என்ற பெண்ணே இவ்வாறு தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சிறிய தூரத்தை பயணம் செய்து கட்டணத்தை செலுத்த முயற்சித்துள்ளார்.
பயண தூரத்திற்கான கட்டணமாக 7 டொலர்கள் காண்பிக்கப்பட்டதாகவும் குறித்த பெண் 10 டாலர்களை குறித்த நபருக்கு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த நபர் பத்து டாலர்களை ஏற்க மறுத்து விட்டதாகவும் டெபிட் அட்டை மூலம் மட்டுமே கொடுப்பணவு செய்ய முடியும் எனவும் சாரதி கூறியுள்ளதாக தெரிவிக்கின்றார்.
எனினும் குறித்த பெண் விருப்பமின்றி டெபிட் அட்டை மூலமாக குறித்த கட்டணத்தை செலுத்தியுள்ளார்.
இந்த டெபிட் அட்டையை பயன்படுத்தி கொடுப்பனவு செய்து மறுநாள் பார்த்தபோது தனது கணக்கில் சில மோசடியான கொடுக்கல் வாங்கல் இடம் பெற்றிருப்பதாகவும் மொத்தமாக 7,485 டாலர்கள் மோசடியாக பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதனைம் அவதானித்ததாக தெரிவிக்கின்றார்.
டாக்ஸி மோசடிகள் அதிக அளவில் இடம் பெற்று வருவதாக கனடிய டாக்ஸி ஒன்றியம் தெரிவித்துள்ளது. எந்த ஒரு நபரும் தாம் டாக்ஸி சாரதி என தோன்றி மோசடிகளை செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக கனடிய டக்சி ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த பெண் மோசடியாக இழந்த பணத்தை வங்கி மீள அறவீடு செய்து வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தமக்கு நேர்ந்த நிலையை வங்கிக்கு தெளிவுபடுத்திய பின்னர் அந்த கொடுப்பனவுகளை ரத்து செய்து பணத்தை மீண்டும் தனது கணக்கில் வரவு வைத்துள்ளதாக தெரிவிக்கின்றார்.
பல்வேறு வழிகளில் இவ்வாறான டாக்ஸி மோசடிகள் இடம் பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.