கனடாவில் 100 கிலோ போதைப் பொருள் மீட்பு
கனடாவின் டொராண்டோவில் சுமார் 100 கிலோ கிராம் எடையுடைய கொக்கெயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
டொராண்டோ பெரும்பாகம், நயாகரா மற்றும் நோவா ஸ்கோஷியா பகுதிகளில் பல மாதங்கள் நடைபெற்ற விசாரணையின் பின் 100 கிலோகிராம் மேலான கொக்கெயின் மற்றும் 2.15 லட்சம் டொலர் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கனடாவின் ஓன்டாரியோ மாகாண காவல் துறை (Ontario Provincial Police – OPP) தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 4 ஆம் திகதி, ரிச்ச்மண்ட் ஹில்லில் உள்ள ஒரு வீட்டில் சுற்றி வளைப்பு நடத்தப்பட்டபோது, சுமார் 101 கிலோ கிராம் கொக்கெயின் மற்றும் 2.15 லட்சம் டொலர் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கும்பலின் முழு உறுப்பினர் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
ரேண்டி மெகீன், ஷெரி ஸ்டில்வெல், கோடி சூலியர் மற்றும் டேவிட் கிரதர்ஸ் ஆகிய சந்தேக நபர்கள் இந்த சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நால்வருக்கும் "போதைப்பொருள் கடத்தல் நோக்கில் வைத்திருத்தல்" மற்றும் "குற்ற வருவாய் வைத்திருத்தல்" ஆகிய 8 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.