ரொறன்ரோவில் வயோதிபர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் கொள்ளைகள்
கனடாவின் ரொறன்ரோவில் வயோதிபர்களை இலக்கு வைத்து கொள்ளை சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் இந்த கும்பலில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
வயோதிபர்களை திசை திருப்பி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்படுவதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் இந்த கொள்ளை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
வங்கிகள் மற்றும் கடைகளில் இந்த கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பல்வேறு நுட்பங்களை பயன்படுத்தி முதியவர்களிடமிருந்து வங்கி அட்டைகளின் ரகசிய இலக்கங்கள் நுழைவுச் சொற்கள் போன்றவற்றை களவாடுதல், வங்கி அட்டைகளை களவாடுதல் அல்லது அவர்களுடைய பணப்பைகளை களவாடுதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களுடன் இந்த ஐந்து பேரும் தொடர்பு பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதிநவீன அலைபேசிகள் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக மொத்தமாக 96 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.