மத்திய கிழக்கில் நரகம் வெடிக்கும்; ஹமாசுக்கு கெடு விதித்த டிரம்ப்!
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வரும் 20 ஆம் திகதி பதவியேற்க உள்ளார். அவர் அதிபராக பதவியேற்கும்முன் இஸ்ரேல் , ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு பணய கைதிகள் மீட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வரும் 20 ஆம் திகதிக்குள் பணய கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டுமென ஹமாசுக்கு டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
ஓராண்டை கடந்தும் நீடித்து வரும் போர்
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2023ம் ஆண்டு அக்டோபர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தி 251 பேரை பணய கைதிகளாக கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டது. ஓராண்டை கடந்தும் இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் நீடித்து வருகிறது.
இந்த போரில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்தவும், பணய கைதிகளை மீட்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 20ம் தேதிக்குள் பணய கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டுமென ஹமாசுக்கு டிரம்ப் கெடு விதித்துள்ளார். இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறுகையில்,
20 ஆம் திகதி நான் பதவியேற்கும்முன் ஹமாஸ் பணய கைதிகளை விடுதலை செய்யவேண்டும். பேச்சுவார்த்தை தொடர்பாக நான் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவிரும்பவில்லை. ஆனால் பணய கைதிகள் விடுதலை செய்யப்படவில்லையென்றால் மத்திய கிழக்கில் நரகம் வெடிக்கும்' என டிரம் எச்சரித்துள்ளார்.